• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பில்கேட்சுக்கு கொரோனா தொற்று

ByA.Tamilselvan

May 11, 2022

மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலக பணக்காரர் பட்டியலில் முக்கியமானவருமான பில்கேட்சுக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளது.
2019 ம் சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ மூனறு ஆண்டுகளைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.குறைவது போல் தெரிந்தாலும் உருமாற்றம் அடைந்து மீணடும் வீரியத்துடன் பரவ தொடங்குகிறது.தடுப்பூசி போட்டக்கொண்டாலும் தொற்று ஏற்ப்படுகிறது.
சீனா உள்ளிட்ட கிழக்காசி நாடுகள் ஐரோப்பிய நாடுகளில் தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது.கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 51.83 கோடியாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 47.31 கோடியாகவும் உள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62.79 லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், உலக பணக்காரர்கள் வரிசையில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. சிறிய அளவிலான அறிகுறிகள் தெரிந்தது. எனவே தொற்றில் இருந்து குணமாகும் வரை என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.