• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இந்தியாவில் 34,973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

By

Sep 10, 2021 ,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 260 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,31,74,954 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 8,290 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,31,74,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 260 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,42,009 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 37,681பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,2342,299 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,90,646 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 72,37,84,586 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 67,58,491 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.