• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கொரோனா பாதிப்பு இரு மடங்காக உயர்வு

ByA.Tamilselvan

Jun 29, 2022

தமிழ்நாட்டில் மிகமிக குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக படிபடியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து உள்ளது. கடந்த 21-ந்தேதி தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,366 ஆக இருந்தது. நேற்று கொரோனா பாதிப்பு 8,970 ஆக இருந்தது. இதன் மூலம் ஒரே வாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு ஆகி உள்ளது. மேலும் தினசரி பாதிப்பும் அதிகரித்தபடியே இருந்தது. நேற்று ஒரே நாளில் 1,484 பேர் தொற்றுக்குள்ளாகி இருக்கிறார்கள்.