• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஸ்ருதிஹாசனுக்கு கொரோனா உறுதி!

2011-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ருதி! பின், பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் மொழிபடங்கள் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தற்போது, பிரபாஸுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் நடித்துள்ள படம் விரைவில் வெளியாகவுள்ளது, அதனை தொடர்ந்து பாலகிருஷ்ணாவின் படம் ஒன்றில் ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ரசிகர்களுக்கு அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் ‘நான் மிகவும் பாதுகாப்பாக தான் இருந்தேன் இருப்பினும் எனக்கு கொரோனா உறுதியாகிவிட்டது. நான் குணமடைந்து வருகிறேன், விரைவில் குணமாகி வந்து உங்களை சந்திப்பேன்’ என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவை பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் குணமடைவீர்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சில வாரங்களுக்கு முன்னர் தான் கமல்ஹாசன் கொரோனா நோயால் அவதிப்பட்டு உடல்நிலை தேறிவந்த நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.