• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் இன்று 1,090 பேருக்கு கொரோனா உறுதி!..

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,090 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 1,20,376 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 1,090 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 141 ஆக குறைந்திருக்கிறது. 12 வயதிற்குட்பட்ட 81 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் இன்று 15 பேர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,048 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 12,540ஆக உள்ளது.

மதுரையை பொறுத்தவரையில் இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15ஆகவும், 14 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் உயிர் இழந்துள்ளார்.