• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கொரோனா 4வது அலை … மீண்டும் பொதுமுடக்கமா..?

Byகாயத்ரி

Apr 26, 2022

கொரோனாவின் 3-வது அலை அடங்கிய 2 மாத இடைவெளிக்கு பிறகு, நாட்டின் பல பகுதிகளில், தற்போது மீண்டும் கொரோனா பரவலானது அதிகரித்து வருகிறது.இந்நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சில வாரங்களாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது, தமிழ்நாட்டிலும் புதிதாக கொரோன தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது, கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத் துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தும் அளவுக்கு மீண்டும் நிலைமை போய் கொண்டிருக்கிறது. அந்த வகையில், சென்னை கிண்டி, ஐஐடி வளாகத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது சென்னைவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இவ்வாறு ஐஐடி வளாகத்தில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக கொரோனா 4-வது அலையின் அறிகுறியாக இருக்குமோ எனவும், இதனால் தலைநகர் சென்னையில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுவிடுமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.