வலிமை திரைப்படம் சினிமா ரசிகர்களை பெரிதாக திருப்திப் படுத்தவில்லை என்று பொதுவாக ஒரு கருத்து சொல்லப்படுகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இரண்டரை ஆண்டுகளுக்கு பின், நேற்று அஜித்தின் வலிமை திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. எனினும், வலிமை திரைப்படம் தன் ரசிகர்களை முழுவதுமாக திருப்திப் படுத்தவில்லை என்று கருத்து எழுந்துள்ளது..
மேக்கிங்கில் படக்குழு செலுத்திய கவனம் கதையிலும் திரைக்கதையிலும் தொய்வு ஏற்பட்டதால் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிலும் திரைக்கதை எல்லாம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த சத்யராஜின் வால்டர் வெற்றிவேல் திரைப்படத்தைப் போலவே இருப்பதாக கூறப்படுகிறது. அஜித்தின் தம்பி வில்லனாக மாறுவது எல்லாம் அந்த காலத்திலேயே வால்டர் வெற்றிவேல் படத்தில் இருந்ததுதான் என பலரும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.