சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மூன்று குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்த மத்திய அரசை கண்டித்து ஜனநாயக விரோத மூணு குற்றவியல் சட்டங்களின நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. அரசியல் சட்ட உரிமைகளை பறிக்காதே! காவல்துறைக்கு அதிகமான அதிகாரத்தை வழங்காதே என்றமுழக்கத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜனநாயக விரோத 3 குற்றவியல் சட்டங்களை எரிக்கும் போராட்டம்சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சாத்தையா தலைமையில் நடைபெற்றது. இதில் அரசியல் சட்ட உரிமைகளை பறிக்காதே காவல்துறைக்கு அதிகமான அதிகாரங்களை வழங்காதே என்று கோஷமிட்டு ஜனநாயகத்திற்கு விரோதமான மூன்று குற்றவியல் சட்டங்களின் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட துணை செயலாளர் கோபால்உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமான பங்கேற்றனர்.
