• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆண்கள் உரிமைத்தொகை குறித்து தான் பேசியதை, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் விளக்கம்…

ByG.Suresh

Aug 11, 2024

சிவகங்கை திறந்த வெளி விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியார்களை சந்தித்தபோது..,

நேற்றைய தினம் காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என நான் கூறியதாக ஊடகங்களில் திரித்து செய்தி வெளியிட்டுள்ளனர் என மறுப்பு தெரிவித்தவர். ஆண்களும் பெண்களும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் சமமாக வாழ வேண்டும் என்பதே திராவிடமாடல் ஆட்சி என்றவர், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக எப்போது பொறுப்பு ஏற்பார் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் தெரிவித்தார்.