துணை ஜனாதிபதி நாளை உதகை வருவதை ஒட்டி கான்வாய் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. உதகை நகரில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டின் மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களின் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் உதகையில் உள்ள ராஜ்பவனில் தொடர்ந்து 4வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளகிறார். ஏப்ரல் 25ம் தேதி தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி மாநாட்டிற்குத் தலைமை தாங்கவுள்ளார்.
இந்நிலையில் நாளை துணை ஜனாதிபதி உதகைக்கு வருகை புரியுள்ள நிலையில், இன்று ராஜ்பவன் மாளிகையில் இருந்து ஹெலிகாப்டர் தளம் வரை கான்வாய் ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்றது. மேலும் துணை ஜனாதிபதி வருகையையொட்டி உதகை நகரில் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
துணை ஜனாதிபதி வருகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.