• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

விஜய் மல்லையாவுக்கு தண்டனை

Byமதி

Dec 1, 2021

விஜய் மல்லையாவுக்கான தண்டனை விபரம், வரும் ஜன., 18 ல் அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, 9,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றார். லண்டனில் உள்ள அவரை, இந்தியாவுக்கு கொண்டுவர பலவேறு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

விஜய் மல்லையாவுக்கு எதிராக வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என தீர்ப்பளிக்கப் பட்டது. வழக்கில் மல்லையா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அவருக்கான தண்டனை மீதான விசாரணை மட்டும் இன்னும் முடியவில்லை.

நீதிமன்றத்தில் மல்லையா ஆஜராக போதிய அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. இனியும் காத்திருக்க முடியாது. அதனால் மல்லையாவுக்கு வழங்கப்படும் தண்டனை மீதான விசாரணை, வரும் ஜன., இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட்டு,18 ல் தீர்ப்பு வெளியாக உள்ளது.