தேனி மாவட்டம் ஹைவேவிஸ் பேரூராட்சிக்குட்பட்ட மேகமலை, மணலாறு பகுதியில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வளரும் பருவத்தினர் திருமணம் செய்வது குறித்து ஏற்படும் பாதிப்பு குறித்து தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு தெரு நாடகங்கள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கட்சி நிர்வாகிகள் பட்டாசுகளை வெடித்து வரவேற்பு அளித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை வன பகுதிக்கு உட்பட்ட மேகமலை, மணலாறு பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாகும். இதில் வெடி வெடிப்பதற்கு வனத்துறையினர் தடை இருக்கும் நிலையில் தடையை மீறி அமைச்சரை வரவேற்க திமுக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதற்கு ஏற்படுத்தியது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் மா. சுப்ரமணியன், தேனி மாவட்ட ஆட்சியர், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்பட்ட நிலையில் நிகழ்ச்சி நடைபெறும். மணலாறு பகுதியை உள்ளடக்கிய ஹைவேவிஸ் பேரூராட்சி தலைவிக்கு இருக்கை வழங்காமல் அமைச்சருக்கு பின்புறம் நிற்க வைத்தது சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் பேரூராட்சி தலைவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இருக்கை ஒதுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்ததால் சர்ச்சைக்கு மேல் சர்ச்சையானது.













; ?>)
; ?>)
; ?>)