• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சர்ச்சைகளுக்குப் பெயர் போன இந்தி நடிகை ஜாக்குலின்.., வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு..!

இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். போதை மருந்து வழக்கிலும் தொடர்புடையவர். பாலிவுட் நடிகர் சல்மான்கானுடன் நெருக்கமாக இருக்கிறவர். தற்போது அவருக்கு பிரபல மோசடி மன்னன் சுகேசுக்கும் இருக்கும் நட்பும், தொடர்பும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

சுகேசுடன், ஜாக்குலின் நெருக்கமாக இருக்கும் படங்கள்,முத்தம் கொடுக்கும் படங்கள்சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதோடு சுகேஷ் ஜாக்குலினுக்கு கோடி கணக்கில் பணம் கொடுத்திருப்பதும் வெளிவந்திருக்கிறது.

இந்த நிலையில் ஜாக்குலின் ரியாத்தில் நடக்கும் கலைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள டெல்லி விமான நிலையத்துக்கு வந்தார். அவரை தடுத்து நிறுத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் உங்கள் மீது அமலாக்கத்துறை லுக்அவுட் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதனால் நீங்கள் எந்த வெளிநாட்டுக்கும் போக முடியாது என்று கூறி திருப்பி அனுப்பினர்.

இதனால் ஏமாற்றத்துடன் திரும்பினார் ஜாக்குலின். சுகேஷ் சந்திரசேகரின் மோசடி வழக்குகளில் ஜாக்குலின் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.