தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் தேனி மாவட்ட வருவாய் துறையை சேர்ந்த அலுவலர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேனி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தேனி மாவட்டத்தில் கடந்த நான்கு வருடங்களாக வருவாய்த்துறையில் உள்ள காலி பணியிடங்கள் குறித்த பட்டியல் வெளியிடவில்லை இதனால் 12 துணை வட்டாட்சியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் இது குறித்து மாவட்ட நிர்வாகத்தை வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சந்தித்து காலி பணியிடங்கள் குறித்த பட்டியலை வெளியிட பலமுறை கோரிக்கை வைத்தும் எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை
என தெரிவித்தனர்

தேனி மாவட்டத்திலுள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் அதற்கு முன்பு வருவாய்துறை அலுவலர்களுக்கு தற்காலிக பதவி உயர்வு வழங்க வேண்டும் இல்லையென்றால் தொடர் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்
மேலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் உள்ளிட்ட வருவாய் துறை சார்ந்த பணிகளை புறக்கணிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உரிய நடவடிக்க எடுக்கவில்லை என்றால் மாவட்ட அளவிலான போராட்டம் மாநில அளவில் மாறும் எனவும் தெரிவித்தனார்
வருகிற செப்டம்பர் மாதம் 3,4 தேதிகளில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் தேனி மாவட்ட அனைத்து வருவாய் அலுவலர்களும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தனர்
தேனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது













; ?>)
; ?>)
; ?>)