தேனி மணி நகர் பகுதியில் ஆபத்தான முறையில் தாழ்வாகச் செல்லும் மின் சார வயர்கள் மோதி தொடர் மின்சார தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் அன்னஞ்சி விளக்கு பகுதியில் அமைந்துள்ள மணிநகர் முதல் தெருவில் தாழ்வாக செல்லக்கூடிய மின்சார வயர்கள் மோதி அடிக்கடி மின்சார தடை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அன்னஞ்சி ஊராட்சி, மணி நகர் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளது. இங்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகள் இல்லை.
இதனால் இரவு நேரங்களில் விஷ சந்துக்களான பாம்பு, தேள், பல்லி உள்ளிட்டவைகள் வீடுகளுக்கு புகுந்து விடுகிறது. வீடுகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
எனவே தாழ்வாக செல்லக்கூடிய மீன் வயர்கள் மோதி அடிக்கடி மின்சார தடை ஏற்படுவதை தடுக்க புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொது மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.