காந்திபுரம், ஆர் எஸ் புரம்,கணபதி, சங்கனூர்,கவுண்டம்பாளையம்,சாய்பாபா காலனி,சிவானந்தா காலனி,துடியலூர்,இடையர்பாளையம்,கணுவாய் உட்பட அனைத்து பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

கன மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை முடக்கம் அனைத்து சாலைகளிலும் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கவுண்டம்பாளையம் நல்லம்பாளையம் சாலை முழுவதுமாக மழைநீர் காட்டாறு போல் ஓடுவதால் இருசக்கர வாகன போக்குவரத்து முற்றிலும் முடக்கம்

கவுண்டம்பாளையம் பாங்கோ வீதியில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மரம் சாய்ந்ததில் கார் சேதம்
இதனிடையே சிவானந்தா காலனி அடுத்த அவர் ஹவுஸ் பேருந்து நிழல் குடை மழை காரணமாக திடீரென சரிந்து விழுந்ததில் மழைக்கு ஒதுங்கி இருந்த இரண்டு பேர் பலத்த காயமடைந்து தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




