குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பேச்சிப்பாறை, குலசேகரம் பகுதிகளில் இரவு நேரத்தில் பெய்த கனமழையால் அந்தப் பகுதி முழுவதும் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் சாலைகளில் ஓடியது.
இன்று (நவம்பர்_2)காலை முதலே மாவட்டம் முழுவதும் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது.
நாகர்கோவில் பேருந்து நிலையம் பகுதியில் தொடர்ந்து நிற்காமல் மழை பெய்வதால் பேருந்து பயணிகள் அவர்கள் பயணிக்கும் பேருந்து நிற்கும் இடம் நோக்கி மழையில் நனைந்த வண்ணமே ஓடிச்சென்று பேருந்தை பிடிக்கும் நிலையை காணமுடிந்தது.