மருங்கூர் பேரூராட்சி மருங்கூரில் இருந்து அமராவதி விளை செல்லும் சாலையில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி பேரூர் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்துக்கு மருங்கூர் பேரூர் செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஜெஸீம் முன்னிலை வகித்தார். மருங்கூர் பேரூராட்சி தலைவர் லெட்சுமி சீனிவாசன் வரவேற்றார்.
ஆர்பாட்டத்தை முன்னாள் அமைச்சர், மாவட்ட அதிமுக செயலாளர் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்து பேசினார்.

2013-ம் ஆண்டிலிருந்தே அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் இயக்கமான அ.தி.மு.க.சார்பிலும் சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை வைத்தது வரும் நிலையில். மாவட்ட நிர்வாகமும், அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருவதை கண்டித்து, இன்று முதல் தொடர் போராட்டத்தை. மருங்கூர் வேப்பமர ரவுண்டானா பகுதியில் தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்து. கடந்த காலத்தில் மருங்கூர் பேரூராட்சி தலைவர் லெட்சுமி சீனிவாசன் தொடர்ந்து வைத்து வரும் கோரிக்கையை தெரிவித்தார்.
வேப்ப மரம் நிழலில் இன்று தொடங்கியுள்ள அமராவதி பாதையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றும் வரை தினம், தினம் போராட்டம் என அறிவித்து. தளவாய் சுந்தரம், பச்சைமால். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெஸீம், உடன் கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள் தொடர் போராட்டத்தின் முதல் நாள் போராட்டம் தொடங்கியது.

இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன், மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் சொ.முத்துக்குமார், மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் சி.ராஜன், மாநில இலக்கிய அணி இணை செயலாளர் சந்துரு, மாநில விவசாய அணி இணைச் செயலாளர் தாணுபிள்ளை, மாநில மகளிரணி இணை செயலாளர் ராணி, குலசேகரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுடலையாண்டி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் சேர்மன் சண்முக வடிவு மற்றும் அதிமுக நிர்வாகிகள் சிவ செல்வராஜன், எஸ்.ஏ.விக்ரமன், நரசிங்க மூர்த்தி, வீரபத்திரபிள்ளை, இராஜபாண்டியன், கே.லீன்,:லெட்சுமணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.







; ?>)
; ?>)
; ?>)