• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மதுரை சமயநல்லூரில் கட்டிட தொழிலாளி கொடூர கொலை

ByKalamegam Viswanathan

Jul 10, 2025

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் நேற்று இரவு கட்டிட தொழிலாளி மகாலிங்கம் மகன் வினோத்(எ)வினோத்குமார் முகத்தை சிதைத்து கொடூர கொலை செய்யப்பட்டார்.

மதுரை அருகே கோவில்பாப்பாகுடியை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் வினோத்(எ)வினோத்குமார் (வயது 32) கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி அமுதா (23) என்ற மனைவியும், 2வயது பெண் குழந்தையும் உள்ளது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமயநல்லூர் வைகை ரோட்டில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு தனது நண்பர் பாண்டியனுடன் அந்த பகுதியில் உள்ள சினிமா தியேட்டர் முன்பு நடந்து வந்த போது திடீரென்று ஒரு காரில் அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வினோத்குமாரை வழி மறித்து சரமாரி வெட்டி முகத்தை சிதைத்து படுகொலை செய்தனர்.
அப்போது கொலையாளிகளை தடுக்க முயன்ற பாண்டியை கையில் வெட்டினர். பின் அங்கிருந்து அந்த மர்ம நபர்கள் காரில் ஏறி தப்பி சென்றனர். இது குறித்து தகவலறிந்த சமயநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் பலியான வினோத்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் கடந்த 2022.ஆம் ஆண்டு கோவில் பாப்பாகுடி பகுதியில் நடந்த ஆட்டோ ரவி கொலைக்கு பலிக்கு பலியாக கடந்த 2024.ம் ஆண்டு ஜெயசூர்யா என்பவர் கொலை செய்யப்பட்டார் என்றும், அதனால் பழிவாங்கும் விதமாக, இந்த கொலையும் நடத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்அரவிந்தன், சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பரண்டு ஆனந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டனர். இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த கொலை சம்பந்தமாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து காரில் தப்பி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.