• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சுடுகாட்டில் மொட்டை அடித்து காங்கிரஸ் போராட்டம்- பாஜக புகார்

நாகர்கோவிலில் உள்ள அனைத்து சமுதாய சுடுகாட்டில் மோடி படத்துடன் மொட்டை அடித்து மாநகர தலைவர் நவீன்குமார் தலைமையில்.காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவுகளின் பொறுப்பாளர்கள் நேற்று போராட்டம் நடத்தியதற்கு எதிராக பாஜகவினர் புகார் மனு.
சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு கொடுத்த இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிப்பை எதிர்க்கும் வகையில்.பிரதமர் மோடியின் படத்துடன் சுடுகாட்டில் மொட்டை அடித்துக் கொண்ட செய்தி நேற்று மாலை தினசரிகளில் மற்றும் சமுக வலைத்தளத்தில் வெகுவாக பரவிய நிலையில்.


பாஜகவின் நாகர்கோவில் மாநகராட்சி பாஜக உறுப்பினர்கள்.முத்துராமன்,திருமதி. மீனாதேவ் மற்றும் ஏராளமான பாஜகவினர்.வடசேரி காவல் நிலையத்தில்.பிரதமர் மோடி உருவ படத்துடன்.சுடுகாட்டில் காங்கிரஸ் கட்சியினர் மொட்டை அடித்து நடத்திய போராட்டம்.பிரதமர் மோடியை அவமரியாதை செய்த செயல். இத்தகைய செயலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தனர்.