கூட்டனி கட்சி மட்டுமல்ல, எதிர்கட்சிகளின் போராட்டங்களுக்கு தமிழக அரசு ஜனநாயக முறைப்படி அனுமதி அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் கூட்டனி கட்சிகள் மட்டுமல்ல எதிர்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கும் தமிழக அரசு ஜனநாயக முறைப்படு அனுமதிக்க வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கையாக கைது செய்ய கூடாது என்றும் பேட்டியளித்தார்.
சிவகங்கையில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் அவரது அலுவலகத்தில் அவர் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் கிராம கமிட்டி கூட்டத்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் இன்று நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான கூட்டத்தை வரவேற்பதாகவும் அதனை இந்த அரசு தற்போது செயல்படுத்தவில்லை என்றாலும் வருகிற 2026ல் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின்னர் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறத்தான் செய்யும் என்றும் அதில் மக்கள் தொகை அடிப்படையில் பிரித்தால் வடக்கு பகுதியில் உள்ள ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
அது ஆபத்தானதாக இருக்கும் என்றதுடன் அதற்கு தற்பொதே மேற்கொள்ளப்படும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும் பேசினார். மேலும் இந்த கூட்டம் குறித்து அண்ணாமலை கூறிய கருத்து என்பது சில்லித்தனமான கருத்து என்றும் பேசியதுடன் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாக வெளியான தகவல் குறித்து நீதிபதிகளுக்கான கொலீஜியம் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியதுடன் தொடர் கொலை குறித்து கூலிப்படை கொலைகள் தமிழகத்தில் அதிகரித்திருப்பது வருத்தமளிப்பதாகவும் குறிப்பாக பட்ட பகலில் பிரதான சாலையில் ஒரு நபரை அவரது பின்புலம் பற்றி பேசவேண்டியதில்லை.

இருந்தாலும் அப்படி குறிவைத்து கொடூரமாக வெட்டி கொலை செய்வது வருந்தம் தரக்கூடியதே என்றும் இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றும் முதல்வரும், காவல்துறை தலைவரும் இதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் சம்பவம் நடைபெற்ற பின் மாமூலாக சொல்லும் சட்டம் தன் கடமையை செய்யும் என்று ஆறுதல் வார்த்தை கூறுவதை விடுத்து இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் அவர்கள் எடுக்கும் நடவடிக்கை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும்விதமாக இருக்க வேண்டும் என தமிழக அரசிடம் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கைது குறித்த கேள்விக்கு யார் போராடினாலும் அதற்கு அனுமதிக்க வேண்டும் . குறிப்பாக எதிர்கட்சியாக இருந்தாலும் அல்லது கூட்டனி கட்சியினராக இருந்தாலும் அவர்களின் போராட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும் மத்திய அரசு டெல்லியில் இடம் ஒதுக்கி நேரம் ஒதுக்கி அதற்குள்ளாக போராட்டம் நடத்த அனுமதிப்பதை போல் இங்கேயும் அனுமதிக்க வேண்டும்.
போராட்டம் நடத்துபவர்களை முன் கூட்டியே கைது செய்வது அவர்களை மண்டபத்தில் அடைத்து வைப்பது என்பது கூடாது என்றும் ஜனநாயக முறைப்படி அவர்களை போராட அனுமதிக்க வேண்டும். அதிமுக பாஜக இணக்கமா சேர்ந்து ஆக்சிடென்ட் ஆக போகுதா இல்ல சேர்ந்து போகப்போவதா என எனக்கு தெரியல கார்த்திக் சிதம்பரம் பேட்டி என பேட்டியளித்தார். இந்த கிராம கமிட்டி கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.