மத்தியில் ஆளும் மக்கள் விரோத மோடி அரசையும் கண்டித்தும்,
அமைச்சரவையில் தலித்துக்கு அமைச்சர் பதவி தர மறுக்கும் புதுச்சேரியை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ்
SC – ST பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சட்டசபை அருகில், நடைபெற்றது.

இதில் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி..
புதுச்சேரியில் ஆதிதிராவிட மக்களுக்கு சிறப்புக்கூறு நிதியாக ஆண்டுக்கு 235 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது, இந்த நிதியில் கடந்த நான்கு ஆண்டுகளில் 40 சதவீதம் கூட ரங்கசாமி செலவு செய்யவில்லை என்றார்.
ரங்கசாமி ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது பொதுப்பணித்துறை, வருவாய் துறை,பத்திரப்பதிவு துறை என அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது,ஒரு ரெஸ்ட்ரோ பார் அனுமதி வழங்க முதலமைச்சர் 40 லட்ச ரூபாய் லஞ்சம் பெறுகிறார்,இலவச அரிசி வழங்குவதில் ரங்கசாமி 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டிய நாராயணசாமி எளிய முதல்வர் என்று சொல்கின்ற ரங்கசாமிக்கு ஒரு கோடி ரூபாயில் சொகுசு கார் எதற்கு என்று கேள்வி எழுப்பினார்.
மேடைப்பேச்சு: நாராயணசாமி முன்னாள் முதலமைச்சர்

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி.,
எனக்கென்று எதுவும் கிடையாது ஆனால் எல்லாமே என்னுடையது தான் என்பதுதான் ரங்கசாமியின் கொள்கை, அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜான்குமார்தான் மாப்பிள்ளை ஆனால் சட்டை என்னுடையது என்ற அளவில் ரங்கசாமியின் செயல்பாடு உள்ளதாக விமர்சனம் செய்தார்.
புதுச்சேரி பாஜகவிற்கு இரண்டு தலைமைகள் உள்ளது ஒன்று ராமலிங்கம் மற்றொன்று சார்லஸ் மார்ட்டின் என்று குற்றம் சாட்டிய வைத்திலிங்கம்.. புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு பத்தாயிரம் மாணவர்கள் இடைநிற்றல் ஏற்பட்டுள்ளது, மாணவர்கள் வருகை குறைவால் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளது என்றார்.
25 ஆண்டு காலம் ரங்கசாமி புதுச்சேரியை வீணாக்கி வருகிறார், அவரிடமிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டும் அதற்கு ரங்கசாமியிடமிருந்தும் பிஜேபி-யிடம் இருந்தும் புதுச்சேரியை காப்பாற்ற வேண்டும். பிஜேபிக்கு என்று தனி அடையாளம் கிடையாது அந்த அடையாளத்தை கொடுத்ததே ரங்கசாமி தான், புதிய கார் வாங்க வேண்டும்,மால் கட்ட வேண்டும், பெரிய ஓட்டல் கட்ட வேண்டும் என்றால் ரங்கசாமி வீட்டுக்கு சென்று தான் கட்ட வேண்டும் கடுமையாக சாடினார்.