கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று நேரில் ஆய்வு செய்தார். அவருடன் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, ஜோதிமணி எம்.பி. , விஜய் வசந்த் எம்.பி., ராபர்ட் புரூஸ் எம்.பி.ஏ. ஆகியோரும் கூட்ட நெரிசல் பகுதியை ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களையும் நேரில் சந்தித்து கே.சி.வேணுகோபால் ஆறுதல் கூறினார்.