• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஜய்வசந்துக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த காங்கிரஸ்

கன்னியாகுமரி மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் அதிக முறை வெற்றி பெற்ற கட்சியாக திகழ்கிறது. குமரி தந்தை மார்சல் நேசமணி காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடங்கி வைத்தார்.

1969-ல் நேசமணியின் மறைவுக்கு பின் நடைபெற்ற இடைத்தேர்தலில். காமராஜர் போட்டி இட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து வந்த 1971_நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இரண்டாவது முறையாக காமராஜர் வெற்றி பெற்றார்.

காமராஜர் மறைவுக்கு பின் நடந்த தேர்தலில் குமரி அனந்தன் வெற்றிபெற்றார் ஜனத்தளம் கட்சியின் சார்பில், குமரி அனந்தனுக்கு அடுத்து டென்னிஸ் 5_முறை காங்கிரஸ் கட்சியின் சார்பிலும்,1-முறை தமாகா சார்பிலும் வெற்றி பெற்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஏ.பி.பெல்லார்மின் ஒரு முறையும் (இவை எல்லாம் நாகர்கோவில் மக்களவையாக இருந்த காலகட்டம்).

தொகுதிகள் மறு சீரமைப்புக்கு முன் வரை குமரி மாவட்டத்தில் 7_சட்டமன்ற தொகுதிகள் இருந்தது. மறு சீரமைப்பு காரணமாக திருவட்டாறு சட்டமன்ற தொகுதி இல்லாமல் போனது(இந்த காலக் கட்டத்தில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி திருச்செந்தூர் நாடாளுமன்றத்தினுடன் இருந்தது)

தொகுதி மறு சீரமைப்பிற்கு பின் நடந்த கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் தி மு க வை சேர்ந்த ஹெலன் டேவிட்சன் வெற்றி பெற்றார்.

விஜய்வசந்த்

இதே தொகுதியில் வசந்தகுமார் இரண்டு முறை போட்டியிட்டார். முதல் தேர்தலில் தோல்வி அடைந்தவர்,இரண்டாவது முறை வெற்றி பெற்றார்.

இப்போதைய மக்களவை தேர்தலில் பாஜக சார்பில்,பொன். இராதாகிருஷ்ணன் 10-வது முறையாக போட்டி இடுகிறார். இதில் இரண்டு மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்ற பொன். இராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரவையில் இரண்டு முறை இணை அமைச்சராகவும் இருந்தவர்.

பொன். இராதாகிருஷ்ணன்

ஒரு முறை பொன். இராதாகிருஷ்ணன் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு அ தி மு க., வேட்பாளர் நாஞ்சில் முருகேசனிடம் தோல்வி அடைந்தார்.