• Sun. Apr 28th, 2024

காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டி…

நாடாளுமன்ற தேர்தல் அதன் உரிய காலத்தில் தான் வருமா? அல்லது அதற்கு முன் வருமா என்ற கேள்வி, அரசியல் கட்சிகளிடையே மட்டுமே அல்ல பொது மக்களின் மத்தியிலும் அலசும் செய்தியாக உள்ளது.

தி மு க. கூட்டணியில், காங்கிரஸ் முன்பு போட்டியிட்ட தொகுதிகளிலே பெரும்பான்மையும் போட்டியிட வாய்ப்பு இருக்கும் நிலையில்.சில தொகுதிகளில் வேட்ப்பாளர்கள் மாற்றம் இருக்கும்,சில தொகுதிகளில் புதியவர்கள் போட்டியிட வாய்ப்பு உள்ளது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் போட்டி இடும் என்ற கருத்தை தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடந்த (அக்டோபர்_8)ம் நாள் சிவகாசியில் நடந்த.விருதுநகர், தென்காசி மக்களவைத் தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் மாநாடு மற்றும் பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்ற பின் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் பற்றி செய்தியாளர்களிடம் சூசகமாக தெரிவித்தவர் மேலும் தெரிவித்தவை.

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இது போன்று நாடுமுழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்கும்.

மாநிலம் வாரியாகக் கணக்கெடுப்பு நடத்துவதில் சிக்கல் உள்ளதால். இதனை ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தவர்.அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்ட நிலையில். செய்தியாளர்களிடம். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் போட்டி இடும் என அடிக்கோடிட்டதுபோல்ஒரு கருத்தையும் தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவரின் இந்த தகவல் குறித்து.குமரியில் உள்ள பல்வேறு கட்சியினரிடம் கருத்துக் கேட்டபோது.பலர் சிலர் அண்மை செய்திகளை சுட்டி காட்டி சொன்ன அவர்களது அரசியல் பார்வையில்.

தமிழக அரசியலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதிமுகவினர் தெய்வமாக வணங்கும் ஜெயலலிதா பற்றி வெளி படுத்திய கருத்துக்கள்,அண்ணா பற்றி மதுரையில் நடக்காத ஒன்றை சொல்லியது, இதில் அதிமுக தலைவர்களைவிட. கன்னியாகுமரி முதல் கும்மிடிபூண்டி வரை உள்ள அதிமுக தொண்டர்கள் வெளிபடுத்திய உணர்ச்சி பூர்வமான எதிர்ப்புக்கு எடப்பாடி பழனிச்சாமி முதல் அத்தனை தலைவர்களும் கட்டுப்பட்டு போனது தமிழக அரசியலில் பாஜகவை தனிமை படுத்திய நிலையில்.

திமுக தலைமையிலான கூட்டணி உறுதியான கட்டுக்கோப்பாக இருக்கும் நிலையில்.நாடாளுமன்ற தேர்தல் காலத்தில்,திமுக கூட்டணியில் கூடுதலாக, மக்கள் நீதிமையமும் இணையும் நிலையில்.

கமலஹாசன் அண்மையில் கோயம்புத்தூரில் நடந்த அவர்கள் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது.எனது”மூக்கு” உடைந்திருந்தாலும் மீண்டும் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவித்தார்.

திமுக கூட்டணியை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் நடராஜன் இப்போது மக்களவை உறுப்பினராக இருக்கும் நிலையில்.

திமுக கூட்டணியில் இருந்த ஐஜெகே கட்சி மயை சேர்ந்த பாரிவேந்தர் பாஜக கூட்டணிக்கு தாவிய நிலையில்.பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தலில் கோவைக்கு பதிலாக கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் போட்டி இடும் வாய்ப்பு உள்ளது என்ற தகவல் உள்ள நிலையில்.

அன்றைய நாகர்கோவில் நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஏ.வி. பெல்லார்மின், அன்றைய திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோவைக்கு பதிலாக கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்போம் என குமரியில் உள்ள ஒரு மூத்த காம்ரேட் தெரிவித்தார்.

காங்கிரஸ் – யில் மீண்டும் விஜய் வசந்த் தான் வேட்பாளர் என்ற நிலையில்.

பாஜகவின் வேட்பாளர் யார்.? அண்மையில் ஒரு நிகழ்வில் பொன்னாரிடம் ஆஃப் த ரெக்கார்டாக கேட்டபோது. நான் போட்டியிட்ட அத்தனை நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் அவர் தனக்கு போட்டியிட வாய்ப்பே கேட்டதே இல்லையாம்…..என தெரிவித்தவர் பாஜகவின் அகில இந்திய தலைமை எடுத்த முடிவிற்கு கட்டுப்பட்டு போட்டியிட்டதில், இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றேன் என்பதை தெரிவித்தவரிடம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொன்னார் தான் வேட்பாளரா.? என்ற கேள்விக்கு தலைமையின் முடிவுக்கு கட்டு படுவேன் என்றார்.

ஜனவரியில் ராமஜென்ம பூமியில் திறக்க இருக்கும் ராமர் கோவிலை பாஜக பெரிதாக நம்பி இருக்கிறது என்பதும் பொது மக்களின் கருத்தாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *