• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..,

ByK Kaliraj

Mar 24, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேல தாயில்பட்டியில் கி.ரெதி.அ அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் திறனாய்வு தேர்வு நடைபெற்றதில் 2025- 2026 கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு அகிலேஷ், ராகவி, காவியச்செல்வி ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மூன்று பேருக்கும் ரூபாய் 12,000 கல்வி தொகை பெற தகுதி பெற்றனர். மேற்கண்ட மாணவ, மாணவிகள்,வரும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளார்கள்.

மேலும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வில் கௌதம், அபிஷேக், அஸ்வின், கார்த்திகேயன், கபீஸ், ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு தலா ரூபாய் பத்தாயிரம் உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். திறனாய்வு தேர்வில் தகுதி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.