ராணுவ முகாம்களில் பங்கேற்று விருதுகளை பெற்ற சிவகாசி பி. எஸ். ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்களை கல்லூரியின் தாளாளர் ஆர்.சோலைச்சாமி பாராட்டினார்.
டெல்லியில் 12 நாட்கள் நடந்த அகில இந்திய தாள் சைனிக் முகாமிற்கு கணிப்பொறியில் துறை மாணவி சவுபர்ணிகா தேர்வு செய்யப்பட்டு அங்கு சிறப்பாக செயல்பட்டதற்காக கமோடோர் ராகவ் மாணவிக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கினார்.

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ஏழு நாட்கள் நடந்த ஆர்மி அட்டாச்மென்ட் முகாமில் பி. எஸ். ஆர். கல்லூரி உயிர் மருத்துவத்துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர் வெள்ளத்துரை டெஸ்ட் ட்ரில் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றார். இவருக்கு கர்னல் விஷால் சிங் மேத்தா தங்க பதக்கம் வழங்கினார்.
மாணவர்களை கல்வி குழுமம் தலைவர் தாளாளர் ஆர்.சோலைச்சாமி, இயக்குனர் அருண்குமார், விக்னேஸ்வரி, முதல்வர் செந்தில்குமார், டீன். மாரிச்சாமி, துணை தலைவர் பாலசுப்பிரமணியன், செந்தில், என்.சி.சி. ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ் ஆகியோர் பாராட்டினார்கள்.