• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிரதமருக்கு ஈபிஎஸ் ட்விட்டரில் வாழ்த்து!

பிரதமர் மோடிக்கு, ஈபிஎஸ் ட்விட்டரில் பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்!

இன்று நாடு முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘அறுவடைத் திருநாளான தைப்பொங்கல் திருநாளில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது அன்பான தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல தங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் சிறந்த புதிய சிந்தனைகளுடன் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.’ என்று பதிவிட்டுள்ளார்.