• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஒரே வாரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு…

ByKalamegam Viswanathan

Jul 22, 2023

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே தனியார் நிறுவனத்தில் -அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வைக்கப்பட்ட குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் மீண்டும் பரபரப்பு – தீ 5 மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறையினர் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள தெற்குமாசி வீதி பகுதியில் ஜகிஸ் என்பவருக்கு சொந்தமான டி. ஜி. எம். பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் மற்றும் அதற்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி காலை மேல்தளத்தில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்படட நிலையில் தீ பரவ தொடங்கியது. 

இதனையடுத்து தீ அதிகளவிற்கு எரிய தொடங்கியதால் அந்த பகுதி முழுவதும் ப்ளாஸ்டிக் பொருட்கள் எரிந்து கரும்புகையானது வானுயர அளவிற்கு வெளியேறியது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு திடீர்நகர், தல்லாகுளம், அனுப்பானடி பகுதியிலிருந்து வந்த தீயணைப்புத்துறையினர் 6 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

மீனாட்சியம்மன் கோவில் அருகே தெற்கு மாசி வீதியில் உள்ள ப்ளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் சுவாசிக்க முடியாத அளவற்கு நெடி வீச தொடங்கியது. இந்த தீ விபத்தில் 50 லட்சம் மதிப்பிலான ப்ளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலாகியது.

இந்நிலையில் அதே பிளாஸ்டிக் குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் வைக்கப்பட்ட குடோனில் மீண்டும் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் மேற்கூரைகள் பெயர்ந்து விழுவதால் தீ அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் ,அனுப்பானடி, தல்லாகுளம் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மாநகராட்சி குடிநீர் லாரிகள் மூலமாக தண்ணீர் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கும் பணிகளானது நடைபெற்றது.

தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மாசி வீதியில் ஒரே குடோனில் அடுத்தடுத்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பழமையான கட்டிடங்கள் இருப்பதால் இது போன்ற தீ விபத்துகள் ஏற்படும் போது பழமையான கட்டிடங்கள் இடிந்து விழும் நிலை உள்ளது.

எனவே தீயணைப்பு துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆய்வு செய்து பழமையான கட்டிடத்தில் வசிப்பவர்கள் மீது உரிய அறிவுறுத்தல் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.