• Tue. Dec 30th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குமரி எலக்ட்ரோபதி மருத்துவ முதல் இரண்டு நாட்கள் மாநாடு நிறைவு தீர்மானங்கள்…

குமரி மாவட்டம் இயல்பாகவே மூலிகை மருத்துவர்கள் மட்டும் அல்ல. வர்ம முறை, மற்றும் நாட்டு வைத்தியர்கள் நிறைந்த மாவட்டத்தில், மருத்துவ துறையில் எலக்ட்ரோபதி என்னும் பழமையான மருத்துவம், மருந்துகள் சம்பந்தப்பட்ட இந்த இரண்டு நாட்கள் மாநாட்டில் 3_தீர்மானங்கள், பங்களிப்பாளர்களின் கை ஒலி ஓசையுடன் நிறை வேற்றப்பட்டது.

தீர்மானங்கள்

  1. இந்தியாவில் 120_ ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட எலக்ட்ரோபதி ஹெர்பல் மருத்துவ முறையை,என்.இ.ஹ..ச் .எம் ஆப் இந்தியாவின் கீழ் பயின்ற எலக்ட்ரோபதி மருத்துவ பயிற்சியாளர்கள் இந்த மருத்துவ முறையை மட்டுமே பயிற்சி செய்ய வேண்டும்.

2. இந்தியாவின் வளர்ச்சி நிலையில் இருக்கும் வரை, மத்திய அரசின் 2003, 2010, 2011ன் வழி காட்டுதல் ஆணைகளின் படியும், 1998, 2000, 2022 உயர் நீதிமன்றம் உத்தரவுகளின் படியும் பயிற்சி செய்து வரும். என்.இ.ஹச்.எம் பயிற்சியாளர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை வழி காட்டுதல் ஆணை பெற வேண்டும் என்றும்,

3. ராஜஸ்தான் மாநில அரசு 2018_ம் ஆண்டு,எலக்ட்ரோபதி மருத்துவத்திற்கென்று தனிச் சட்டம் இயற்றி அங்கிகாரம் வழங்கியுள்ளது போன்று, தமிழ் நாட்டிலும் எலக்ட்ரோபதி மருத்துவத்திற்கு அங்கிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.