மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் 33 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி பல சாதனைகள் புரிந்த ஓவிய ஆசிரியர் பழ.சண்முகசுந்தரத்திற்க்கு பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளித் தாளாளர் முகமது இதிரிஸ் தலைமை வகித்து பணி நிறைவுபெற்ற ஓவிய ஆசிரியரின் கலைப்பணியை பாராட்டி பாராட்டுச்சான்றிதழ் வழங்கி கெளரவித்தார். தலைமையாசிரியர் ஷேக் நபி முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் ஷாஜகான் வரவேற்புரையாற்றினார். பணிநிறைவுபெற்ற முன்னாள் தலைமையாசியர் பஷீர் அகமது கான், உதவித்தலைமையாசிரியர்கள் செளகத், ரகமத்துல்லாஹ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
உதவித் தலைமையாசிரியர் ஜாகிர் உசேன் மற்றும் ஆசிரியர்கள் தமிழ்க்குமரன், முகமது ரபி, நூருல்லாஹ், மீர் நாமத்துல்லா இப்ராஹிம், தெளபிக் ராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். பட்டதாரி ஆசிரியர் அல்ஹாஜ் முகமது நன்றியுரையாற்றினார். ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.