சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் சின்ன சோரகை ஊராட்சி சின்ன சோரகை பகுதியில் ஆறு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் மழைக்காலமான தற்போது பாம்பு பல்லி போன்ற விஷ பூச்சிகள் ஊருக்குள் வருவதாலும் இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளரிடமும் நங்கவள்ளி பிடியோ அலுவலகத்திலும் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சின்ன சோரகை ஊராட்சி அலுவலகம் தகுந்த நடவடிக்கை எடுத்து எரியாத தெரு விளக்குகளை போட்டுக் கொடுக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.