• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

செல்போன்கள் காணாமல் போனால் புகார் அளிக்கவேண்டும் -நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்

Byதரணி

Apr 19, 2023

திருடு போன செல் போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் செல்போன்கள் தவறவிட்டாலோ அல்லது காணாமல் போனாலோ புகார் அளிக்கவேண்டும் -நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்., நேரடி கண்காணிப்பில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வி.ராஜு மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திருமதி.V.ரமா தலைமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கைப்பேசிகள் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களில் 118 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . .சிலம்பரசன் உரியவர்களிடம் வழங்கினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் கைப்பற்றப்பட்ட செல்போன்களின் மொத்த மதிப்பு – ரூ.18 இலட்சத்தி 50 ஆயிரம் ஆகும். திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் யாரும் கைபேசிகளை தவறவிட்டாலோ அல்லது காணாமல் போனாலோ உடனே தங்களது கைப்பேசியில் உள்ள சிம்கார்டுகளை சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு உடனே அந்த சிம்கார்டுகளை தற்காலிக சேவை நிறுத்தம் செய்ய வேண்டும் எனவும் ஏனேனில் அந்த சிம்கார்டுகளை குற்றவாளிகள் எவறேனும் தவறாக பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது எனவும் மேலும் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் இணையதளம் வாயிலாகவும் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இந்த (https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistration ) லிங் வழியாக நுழைந்து செல்போன் காணவில்லை என்ற மெனுவை தேர்வு செய்து தங்கள் புகார் மனுக்களை பதிவு செய்யலாம் எனவும்,
பொதுமக்களிடம் கூகுள் பே-யில் சிறிதளவு பணத்தை அனுப்பிவிட்டு தவறுதலாக அனுப்பி விட்டேன் பணத்தை திருப்பி அனுப்புமாறு Request கூகுள்-பே மூலம் அனுப்பி விட்டு அதன்மூலம் அதிக தொகையை ஏமாற்றி பணம் இழப்பு ஏற்படுத்தலாம் எனவும், Part time job என சொல்லி Youtube channel subscribe செய்து அதனை Screenshot அனுப்பினால் பணம் சம்பாதிக்கலாம் என்று நம்பவைத்து லிங்க் அனுப்பி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்ற அதிக வாய்ப்புள்ளது எனவும்
சிறிதளவு முதலீடு செய்தால் பெரிய அளவு சம்பாதிக்கலாம் எனகூறி ஆன்லைன் மூலம் task கொடுத்து ஏமாற்றி பணமோசடி செய்ய வாய்ப்புள்ளது எனவும்,
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் (Amazon, Meesho, Flipkart) இருந்து Gift voucher அனுப்புவதாக நம்பி ஏமாற வேண்டாம் எனவும்,லோன் தருவதாக வரும் குறுஞ்செய்தி, லோன் அப்ளிகேஷன் மற்றும் அழைப்புகள்
ஆகியவற்றை நம்பி ஏமாந்து விடவேண்டாம் என விழிப்புணர்வு வழங்கினார்.மேலும் இணையவழி குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனே 1930 என்ற இலவச தொலைபேசி எண் மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களது புகார்களை பதிவு செய்ய பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.