சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற கம்பன் விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து ராமரை பற்றி அவதூறாக பேசினார்.

இதற்கு தமிழகத்தில் உள்ள பாஜக இந்து முன்னணி மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் வைரமுத்துவிற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கம்பன் விழாவில் ராமரைப்பற்றி அவதூறாக பேசிய வைரமுத்து மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி மாநில விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மாநிலத் தலைவர் ஞானகுரு தலைமையில் முதுநிலை காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர் வலியுறுத்தினார்கள்.