மதுரை மாவட்டம் தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவி காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிந்த நிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் நாச்சிகுளம் கருப்பட்டி இரும்பாடி காடுபட்டி திருவாலவாயநல்லூர் ரிஷபம் கட்டக்குளம் ராமையன்பட்டி கச்சை கட்டி விராலிப்பட்டி குட்லாடம்பட்டி உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது பதவி காலம் வரை ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளுக்காக செலவு செய்த பணத்தை வழங்க கோரி வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி கிருஷ்ணவேணியிடம் கடிதம் மூலமாகவும் மனுக்கள் மூலமாகவும் நேரில் சென்றும் முறையிட்டும் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக பணத்தை வழங்காததால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில் பொதுமக்களின் நலன் கருதி மின்விளக்கு குடிநீர் குழாய் சரி செய்தல் தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளுக்கான செலவுகளை செய்த ஊராட்சி மன்ற தலைவர்கள் செலவுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கூறினர். குறிப்பிட்ட சில முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மட்டும் செலவு தொகைக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு சில ஊராட்சிகளுக்கு வழங்க மறுப்பதாகவும் ஊராட்சி தலைவர்கள் அடிப்படை தேவைகளுக்காக செய்யப்பட்டுள்ள பணிகளுக்கான தளவாடப் பொருட்களை எடுத்துச் செல்லுங்கள் நாங்கள் புதிதாக போட்டுக் கொள்கிறோம் என வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி கூறுவதாகவும் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து விரைவில் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு அளிக்கப் போவதாகவும் கூறியுள்ளனர். எனவே மேற்கண்ட ஊராட்சிகளில் அடிப்படை செலவுகளை செய்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்களின் தொகையை வழங்குவதில் தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். நிலுவைதொகையை வழங்குவதை தாமதிக்கும் பட்சத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்களை ஒன்று திரட்டி வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் கூறுகின்றனர்.