• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஊராட்சி செயலரை மாற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட S.ராமலிங்காபுரம் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மக்கள் குறைகளை அலட்சியப்படுத்தி வருகிறார்.

இவரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் .100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடப்பது கண்டித்தும் அதேபோல் S.ராமலிங்கபுரம் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு முறையாக தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்க கோரியும் அடிப்படை வசதியான வாருகால் குடிநீர் துப்புரவு பணிகளை விரைந்து செய்ய வேண்டும்.

மேலும் சங்கரபாண்டியபுரம் பகுதியில் பொது மயான பாதையை சீரமைக்க வேண்டும் என பல்வோறு கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் . முன்னாள் எம்பி. லிங்கம் .முன்னாள் எம்எல்ஏ ராமசாமி ஆகியோர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் S.ராமலிங்கபுரம் ஊராட்சி செயலர் பணியிடை மாற்றம் செய்ய வேண்டுமென என பல கோரிக்கைகளை முன்வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இராஜபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சபரி
கீழராஜகுலராமன் காவல்துறை ஆய்வாளர் பூமா பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் போராட்டக்காரர்களிடம் நீங்கள் வைத்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்த பின்பு முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.