இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட குழு கூட்டம் மானாமதுரை ஒன்றிய செயலாளர் தோழர் சங்கையா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், சிவகங்கை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் எஸ். குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் தோழர் என் சாத்தையா, மாவட்டத் துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் பா. மருது, கே. கோபால் விவசாய சங்க சிவகங்கை மாவட்ட செயலாளர் தோழர் கே. காமராஜ் மாவட்ட பொருளாளர் மணவாளன், சிவகங்கை ஒன்றிய செயலாளர் சின்ன கருப்பு, நகர செயலாளர் சகாயம், காளையார் கோவில் ஒன்றிய செயலாளர் பில்லப்பன், மாத சங்கம் மாவட்ட தலைவர் மஞ்சுளா, திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் காளிமுத்து, திருப்புவனம் ஒன்றிய செயலாளர் மோகன், தேவகோட்டை ஒன்றிய செயலாளர் சுப்பையா மற்றும் 60க்கும் மேற்பட்ட மாவட்ட குழு தோழர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சிவகங்கை பேருந்து நிலையத்தின் தரத்தை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். சிவகங்கை நகராட்சி நிர்வாகம் சாலையோர வியாபாரிகளுக்கு நிரந்தரமான இடத்தை ஒதுக்கி தர வேண்டும். மாவட்ட நிர்வாகம் சிவகங்கை அண்ணாமலை நகர் பகுதியில் இருள் சூழ்ந்திருக்கும் இடங்களை புதிய மின்விளக்கு அமைத்து தர வேண்டும். சிவகங்கை நகரின் மையப் பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள மதுபான கடைகளை உடனடியாக நகரை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்.
