• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கோலிவுட்டில் கடவுள் பேரில் ரிலீசான கமர்ஷியல் படங்கள்! – ஒரு பார்வை!

பொதுவாக கடவுள் பெயரில் பல படங்கள் அதிகபட்சமாக பக்தி படங்களாக இருக்கும்! இதற்கு சற்று மாறுபட்டு, கடவுளின் பேரில் சில கமர்ஷியல் படங்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது! அவ்வாறு கோலிவுட்டில் வெளியான கமர்ஷியல் படங்கள் குறித்து ஒரு பார்வை!

சிவன்
1999 ல் வேலு பிரபாகரன் இயக்கிய படம் சிவன். அதிரடி திரைப்படமாக வெளியான இப்படத்தில்
அருண்பாண்டியன், துரைசாமி, ராதிகா, சுவாதி, அகானா உள்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை வேலுபிரபாகரன் செய்துள்ளார். ஆதித்யன் இசை அமைத்த படம். எகிப்து நாட்டு கிளியோபாட்ரா, ஓ என் பெண்மை, பெசரட் பெசரட், ருக்குத்தான் ருக்குத்தான், உதிரை கில்லி ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

நரசிம்மா
2001ல் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நடித்த படம். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தை திருப்பதி சாமி இயக்கியுள்ளார். மணிசர்மா இசையில் பாடல்கள் சூப்பர். விஜயகாந்துடன் இஷாகோபிகர், ரகுவரன், நாசர், ரஞ்சித் உள்பட பலர் நடித்துள்ளனர். தீவிரவாதிகளை நாயகன் முறியடிக்கும் கதை தான் இப்படம்!.

விஷ்ணு
1995ல் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படம் விஷ்ணு. தேவா இசை அமைப்பில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின. விஜய், சங்கவி. ஜெய்சங்கர், எஸ்.எஸ்.சந்திரன், செந்தில் உள்பட பலர் நடித்த மசாலா படம். படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளும், கவர்ச்சி அம்சங்களும் நிறைந்து இருந்ததால் இளம் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு படத்தைப் பார்த்தனர்.

அருணாச்சலம்!
முழு கமர்ஷியல் படமாக வெற்றி பெற்ற திரைப்படம், அருணாச்சலம்! ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா, மனோரமா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.. கமர்ஷியல் ஹிட் வரிசையில், நடிகர் ரஜினிகாந்த் திரைப்பயணத்தில் முக்கிய படம் இது!