• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சித்திரை திருவிழாவிற்காக மதுரை நோக்கிச் சென்ற தற்காலிக உண்டியல் எண்ணும் பணி துவக்கம்

ByA.Tamilselvan

Apr 29, 2022

சித்திரை திருவிழாவிற்காக மதுரை நோக்கிச் சென்ற தற்காலிக உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
மதுரையில் தற்போது நடந்து முடிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளில் ஒன்று சித்திரை திருவிழா
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இந்நிகழ்வில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த நிலையில் சித்திரைத் திருவிழாவில் பங்கு பெறுவதற்காக கடந்த 14ஆம் தேதி மாலை லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார் மதுரை வரும் வழியான அப்பன்திருப்பதி கள்ளந்திரி மூன்றுமாவடி தல்லாகுளம் எதிர்சேவை நிகழ்வு வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளல் மண்டுக மகரிஷிக்கு சாபவிமோசனம் கொடுத்த தசாவதாரம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பிறகு மீண்டும் கடந்த 20ஆம் தேதி மக்கள் மத்தியில் கோவிந்தா என்ற கோஷம் முழங்க அழகர் மலைக்கு வந்தடைந்தார் சுந்தரராஜ பெருமாள்.இந்த நிலையில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் இருந்து தற்காலிக 39 தள்ளு உண்டியல்கள் மதுரை நோக்கிப் புறப்பட்டன
இந்த உண்டியல்களில் பக்தர்கள் தங்களுடைய காணிக்கைகளை செலுத்தி வந்தனர் குறிப்பாக பழம் பெருமை வாய்ந்த மாட்டு வண்டிகளில் மரத்தாலான மரப்பெட்டி உண்டியல் மற்றும் பிற உண்டியல்கள் என அனைத்து உண்டியல்களிலுமே மதுரை மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் தங்களது காணிக்கையை கள்ளழகர் வேடம் தரித்து வந்த சுந்தரராஜ பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று முதல் கட்டமாக மரம் உண்டியல்கள் உட்பட 20 உண்டியல்கள் திறந்து எண்ணும் பணியை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டனர்
நாணயங்கள் மற்றும் இந்திய ரூபாய் நோட்டுகள் உட்பட வெளிநாட்டு நாணயங்கள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டன தொடர்ந்து ஒவ்வொன்றும் இயந்திரங்கள் மூலமாக எண்ணப்பட்டன.
பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய உண்டியல் எண்ணும் பணியில் கோவில் பக்தர்கள் உட்பட கோவில் பணியாளர்கள்திருக்கோவில் துணை ஆணையரும் செயல் அலுவலருமான அனிதா தலைமையில் தொடர்ந்து எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.