கரூர், மாநகராட்சிக்குட்பட்ட 67 இடங்களில் ரூபாய் 5.62 கோடி மதிப்பீட்டில் பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழா முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

கரூர் ரத்னா சாலை பகுதியில் தார் சாலை அமைத்தல், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேவர் பிளாக், சமையலறை, சைக்கிள் செட் மற்றும் பராமரிப்பு பணி, தெற்கு மடவலாகும் பகுதியில் வடிகால் மற்றும் சிறு பாலம், பாடசாலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணி, கோட்டைமேடு மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், திருவள்ளுவர் மைதானத்தில் பொதுக் கழிப்பிடம் கட்டும் பணி, பசுபதிலேயே அவுட் இரட்டை வாய்க்கால் அருகே தார் சாலை அமைத்தல் ஆழ்குழாய் கிணற்றுடன் கூடிய சிமெண்ட் டேங்க் அமைக்கும் பணி, உள்ளிட்ட 67 இடங்களில் பல்வேறு பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழாவில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
பல்வேறு பகுதிகளில் செந்தில் பாலாஜிக்கு பொதுமக்கள் பொன்னாடை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, மாநகராட்சி ஆணையர் சுதா, மாவட்ட ,ஒன்றிய, பேரூரர் கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.