• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கலேஜ் ரோடு – விமர்சனம்

கல்வி என்பது நம் தேவை மட்டுமல்ல.. அது நம் உரிமையும்கூட…’ என்பதை கமர்சியல் கலந்து பேசியிருக்கிறது இந்த ‘காலேஜ் ரோடு’ திரைப்படம்.
MP எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பிரவீன் மற்றும் சரத், மற்றும் ஜனா துரைராஜ் மனோகர் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் லிங்கேஷ், மோனிகா, ஆனந்த்நாகு, KPY அன்சர், அக்சய் கமல், பொம்மு ல‌ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அருவி பாலா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஜெய் அமர்சிங், ஒளிப்பதிவு – கார்த்திக் சுப்ரமணியம், படத் தொகுப்பு – அசோக் ஹெச்.அந்தோணி, இணை இயக்கம் – சேகர், சண்டை இயக்கம் – பி.சி., நடன இயக்கம் – விஜி,
சென்னையில் மிகப் பெரிய கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக சேர்கிறார் லிங்கேஷ். அப்போது, வங்கிகளின் பாதுகாப்பை மேன்மைப்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன்றை உருவாக்கும் லிங்கேஷ் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார்.அதே சமயம் சென்னையின் முக்கிய வங்கிகளில் கொள்ளைகள் நடக்கின்றன. ஒருபுறம் அதற்கான விசாரணைகள் நடக்கின்றன. நாயகன் லிங்கேஷூக்கும், வங்கி கொள்ளை சம்பவங்களுக்கான லீட் எப்படி வருகிறது என்பதையும், வங்கிக் கொள்ளைக்கான காரணம் என்ன என்பதையும், தற்போது கல்வித் துறை எப்படியானவர்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும் பல அதிரடி திருப்பங்களோடு விரிவாக பேசுகிறது இந்தப் படத்தின் திரைக்கதை.
முதன்மை நாயகனாக லிங்கேஷ்
நாயகியாக மோனிகா நடித்திருக்கின்றனர்
லிங்கேஷின் கிராம நண்பர்களாக வரும் நால்வரும் நல்ல தேர்வு. கல்லூரி நண்பராக வருபவரின் கேரக்டரும், அவரின் நடிப்பும் அருமையாக அமைந்துள்ளது. காமெடிக்கென தனி ட்ராக் இல்லாமல் கதையுடனேயே இணைத்துள்ளார் இயக்குநர். காமெடியில் ஒருவர் மட்டும் நம் கவனத்தை ஈர்க்கிறார்.
யூத்புஃல்லாக ஆரம்பிக்கும் முன் பாதியில் ஒளிப்பதிவாளர் வண்ணங்களை அழகாக இணைத்து விஷுவலாக படத்திற்கு எனர்ஜி ஏற்றியுள்ளார். இசை அமைப்பாளர் தன் வேலை கச்சிதமாக கொடுத்துள்ளார். படத்தில் வரும் மிக முக்கியமான ப்ளாஸ்பேக் சீக்வென்ஸில் பின்னணி இசை அருமையாக அமைந்துள்ளது.சிறிய பட்ஜெட்டிலும் இவ்வளவு பிரம்மாண்டத்தையும் நம்பகத் தன்மையையும் மேக்கிங்கில் கொண்டு வந்தது நிச்சயமாக ஒரு ஆச்சர்யமான விஷயம்தான்.
ஒரு நல்ல கருத்தை தாங்கி வந்துள்ள இந்த ‘காலேஜ் ரோடு’ நிச்சயமாக பார்க்க வேண்டிய படம்.