• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொங்கல் தொகுப்பு மக்களை சென்றடைய கலெக்டர்களே பொறுப்பு தமிழக அரசு

பொங்கல் தொகுப்பு மக்களை சென்றடைவதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்களே பொறுப்பு என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000 ரொக்கத்துடன், முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று தமிழக அரசு
அறிவித்தது. மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க நிதி ஒதுக்கியும், மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைத்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட கலெக்டர்களே முழு பொறுப்பு. அந்ததந்த மாவட்ட கலெக்டர்கள் உன்னிப்பாக கவனித்து, அனைத்து மக்களுக்கு பொங்கல் தொகுப்பு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். பச்சரிசி, ழுழுக்கரும்பு முழு தரத்துடன் இருப்பதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். எக்காரணத்தை கொண்டும் தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.