• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி தேசப்பிதா அண்ணல் காந்தியடிகளின் நினைவு மண்டபத்தில் ஆட்சியர் அஞ்சலி.

இந்திய நாட்டின் தந்தை என போற்றப்படும் தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள், கோட்சே என்னும் கொடியவன் சுட்டதில். தேசத்தந்தை காந்தியடிகள் மரணம் அடைந்த 76-வது நினைவு தினம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் இந்திய நாட்டு மக்களால் நினைவு கூறப்படுகிறது இன்று.

குமரி மாவட்டத்தின் நிர்வாகத்தில் சார்பில் குமரி ஆட்சியர் ஸ்ரீதர். கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தின் காந்தி அஸ்தி கட்டத்தில் காந்தியடிகளின் படத்திற்கு ஆட்சியர் ஸ்ரீதர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் காந்தி மண்டபத்தில் உள்ள பதிவேட்டியில், காந்தியின் நினைவு தினமான ஜனவரி 30.01.2024யில் அவரது வருகை குறித்த பதிவை பதிவு செய்தார் உடன் வருவாய் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இன்று முழுவதும் காந்தி நினைவு மண்டபம் அஸ்த்திக் கட்டம் பகுதியில் அம்பர் ராட்டை மூலம் நூல் நூற்பது நடைபெருகிறது. அயல் நாட்டை சேர்ந்த மூன்று பொண்கள் ராட்டையில் நூல் நூர்த்ததுடன்,தேசபிதவிற்கு அஞ்சலியும் செலுத்தினார்கள்.