• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அடிப்படை வசதி செய்து கொடுங்க கலெக்டர்…ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

திருமங்கலம் தொகுதியில் பல்வேறு மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ,மாவட்ட ஆட்சியரிடம் நேரில் கோரிக்கை விடுத்தார்.

திருமங்கலம் தொகுதியில் உள்ள ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப் பள்ளியில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் ஆய்வு மேற்கொண்டார், அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்,பி உதயகுமார் நேரில் சென்று திருமங்கலம் தொகுதி மக்களுக்கு ,பல்வேறு அடிப்படை வசதி வேண்டி கோரிக்கையாக கூறியதாவது

திருமங்கலம் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது, தற்போது இந்த பகுதிகளில் குழி தோண்டப்பட்டுள்ளது தற்போது மழை காலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், மக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது இதன் மூலம் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. இந்த பகுதிகளில் உரிய பாதுகாப்புக்கு தடுப்பு வேலிகளை அமைத்திட வேண்டும் என்றும், அதேபோல் இந்தப் பகுதி சாலையோர வியாபாரகளுக்கு உரிய இடங்களை அமைத்து தரவேண்டும் என்றும் .

ஆலம்பட்டி ஊராட்சி மேல்நிலைப் பள்ளியில் நான்கு வழி சாலை ஒட்டி வருகிறது அதனால் பள்ளி மாணவர்கள் செல்ல மாற்று பாதை அல்லது சுரங்கப்பாதை அமைத்திட வேண்டும் என்றும், அதேபோல் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்ட இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை விரைவாக நிதி ஒதுக்கி தருமாறும், ஏழூர் முத்தாலம்மன் திருவிழா நடைபெற உள்ளது இதில் அம்மாபட்டி கிராமத்தில் சப்பரம் எடுத்துச் செல்லப்படும் இந்த பாதையில் தற்போது சாலை அமைக்க பணி நடைபெற்று வருகிறது இதில் நடுரோட்டில் 14 மின்கம்பங்கள் உள்ளது இதனால் சப்பரம் செல்ல மிகவும் சிரமம் ஏற்படும் அதனால் இந்த 14 மின் கம்பங்களை அரசின் சார்பில் அப்புறப்படுத்த வேண்டும் என்றும்,

தொடர்ந்து தொகுதி மக்களின் அடிப்படை வசதி கோரிக்கையை ஏற்ப தங்களுக்கு கடிதம் அனுப்பி வருகிறேன் அதற்கு தகுந்த நடவடிக்கை வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே தமிழரசன், எஸ் எஸ் சரவணன், மாணிக்கம், மாவட்ட கழக பொருளாளர் திருப்பதி, ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், யூனியன் சேர்மன் லதா ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.