• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

வாக்கு சாவடி மையங்களில் கலெக்டர் பிரவீன் குமார் நேரில் ஆய்வு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணி கள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வாடிப்பட்டி பகுதியில் உள்ள 5 வாக்குச்சாவடி மையங்கள், பதட்டமான வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்முன் ஏற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் ,தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு மையம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன்தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அதிகாரி சண்முக வடிவேல், உதவி தேர்தல் அதிகாரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பஞ்சாசரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜமார்த்தாண்டன், செல்லப்பாண்டி, போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன்,
தேர்தல் துணை தாசில்தார் கருப்பையா, வருவாய் ஆய்வாளர் கௌதம் குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயபிரகாஷ், ஜெயராஜ் ஆகியோர் வந்திருந்தனர்.