விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் செயல்படக்கூடிய சங்கரா கண் மருத்துவமனை மற்றும் டைட்டான் நிறுவனம் இணைந்து நமது கிராமம் கண் குறைபாடு இல்லாத கிராமம் நிறைவு விழா இராஜபாளையம் டி பி மில் சாலை அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சங்கரா கண் மருத்துவமனை மற்றும் டைட்டான் இணைத்து கிராமா பகுதிகளில் கண்குறைபாடுகளை கண்டாறி வீடு வீடுடாக சென்று ஏழை எளிய மக்களை சந்தித்து கண் குறைபாடுகளை கண்டறிந்து . கண் நோய் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட.20 நபர்கள் தன்னார்வலர்களால் 1லட்சம் 10 ஆயிரம் நபர்கள் கண் நோய் கண்டறியப்பட்டு
2000 பயனாளிகளுக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய தன்னார்வர்களுக்கு பாராட்டில் சான்றிதழ்கள் வழங்கும் மற்றும் திட்ட நிறைவு விழா நடைபெற்றது.

இந்த நிறைவு விழாவில் சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்பான் தலைமை வகித்தார் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை தலைவர் அஸ்வத்தாமமன் வரவேற்புரையாற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக டைட்டான் கம்பெனி தலைமை அதிகாரி ஸ்ரீதர் மற்றும் இராஜபாளையம் மருத்துவ அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் . சிவகாசி சார் .ஆட்சியர் முகமது இர்ஃபான் தன்னார்வலுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்





