விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகா அய்யனார் கோவில் மலை அடிவாரத்தில் வாழக்கூடிய மலைவாழ் மக்கள் மற்றும் வத்திராயிருப்பு தாலுகாவில் இருக்கக்கூடிய மழை அடிவாரப் பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் கிராமமான ராம்நகர் .ஜெயந்த் நகர். அத்திகோயில் உள்ளிட்ட பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் இவர்களால் ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டு வாங்க முடியாமல் சிரமப்பட்டு வந்த நிலையில்,

விருதுநகர் மாவட்டத்திற்கு புதிதாக வந்துள்ள மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா கடந்த ஒரு மாதத்திற்க்கு முன்பு மலைவாழ் மக்கள் வசிக்ககூடிய முகாமிற்கு சென்று அவர்களுடைய கோரிக்கையை கேட்டறிந்த உடன் மலைவாழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக சிவகாசி கோட்டாட்சியர் பாலாஜி துரித நடவடிக்கையின் காரணமாக இன்று பிறப்புச் சான்றிதழ் ஆதார் கார்டு ரேஷன் கார்டு போன்றவை வழங்கப்பட்டன. கடந்த 70 ஆண்டு காலமாக பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் எந்த ஒரு பயனும் அடைய முடியாமல் காத்திருந்த முதியோருக்கும் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு ஆதார் கார்டு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் 61 பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சிவகாசி கோட்டாட்சியர் பாலாஜி இராஜபாளையம் வட்டாட்சியர் ராஜீவ் காந்தி மற்றும் அரசு அதிகாரிகள் மலைவாழ் மக்கள் என கலந்து கொண்டனர்.