• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

முத்துமாரியம்மன் கோவிலில் கருவறையின் கதவை திறந்து வைத்த ஆட்சியர் அருணா..,

ByS. SRIDHAR

Feb 23, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோயிலில் மாசி மகா திருவிழாவை முன்னிட்டு பூச்செறிதல் விழாவை முன்னிட்டு நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பல்வேறு வகையான பூக்களை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் காணிக்கையாக செலுத்தினர்.

இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டு வந்து கொட்டப்பட்ட 10 டன் பூக்களை இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலின் கருவறை கதவை திறந்து வைத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் அருணா புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் உள்ளிட்டவருக்கு மரியாதைகள் செய்யப்பட்டு பூ பிரிக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

பக்தர்களால் கொண்டு வந்து கொட்டப்பட்ட 10 டன் பல்வேறு வகையான பூக்களை கோயில் ஊழியர்கள் தற்பொழுது பிரித்து அள்ளும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மாநகரப் பகுதியிலிருந்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தற்பொழுது கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.