கன்னியாகுமரி பேரிடர் முகாமில் ஆட்சியர் அழகு மீனா நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழையினால் இன்று (02.11.2024) புது கிராமம் தாழ்வான குடியிருப்பு பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களை பாதுகாப்பாக கன்னியாகுமரி பேரிடர் மேலாண்மை மையத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா, இ.ஆ.ப., நேரில் சந்தித்ததோடு, பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டு அறிந்தார்கள்.


முகாமில் தங்கியிருந்த மழையால் பாதிக்கப்பட்டு, தற்காலிகமாக தங்கியிருக்கும், இளைஞர்கள், இளம் பெண்கள். ஆட்சியாளர் அழகு மீனா நலம், பாதுகாப்பு பற்றி விசாரித்ததில் ஒரு தாய்மையின் பரிவுடன் இருந்ததை உணர்வதாக தெரிவித்தார்கள்.
