• Mon. Nov 16th, 2026

கோவை – “கோமகள் மாரத்தான் 2026 – Run for Her”

BySeenu

Jun 29, 2026

கோவையில் பெண்களின் முன்னேற்றம், உடல்நலம் மற்றும் சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள “கோமகள் மாரத்தான் 2026 – Run for Her” நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் வெளியீட்டு விழா, ராஜீவ் காந்தி நகர் சங்க மைதானத்தில் நடைபெற்றது.

Off Screen Hub சார்பில், நிர்மலா மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். ஸ்ரீ கிரி பிரசாத் அவர்கள் டி-ஷர்ட் வெளியிட்டு விழாவை தொடங்கி வைத்தார்.


மேலும் விஜய் ஆனந்த், ராபர்ட் போஷ் நிறுவனத்தின் HR குழுத்தலைவர் வனிதா, இன்ஃபினிட்டி நிறுவனத்தின் ராஜேஷ் ஆகியோருடன், டாக்டர் நித்யா, டாக்டர் மல்லிகா, டாக்டர் கே. மோகனா மற்றும் பார்வதி ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பெண்களின் முன்னேற்றத்திற்கான இந்த முயற்சியை பாராட்டினர்.

“Run for Her” என்பது ஒரு மாரத்தான் மட்டுமல்ல; பெண்களின் பாதுகாப்பு, சமத்துவம், உடல்நலம் மற்றும் அதிகாரமளிப்பை முன்னிறுத்தும் ஒரு சமூக இயக்கம் என்பதை விருந்தினர்கள் வலியுறுத்தினர்.